Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. திரளானோர் பங்களிப்பு…!!

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மேலாண்மை குழு சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் பள்ளி குழு சந்திப்பு  நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. இந்த சந்திப்பு விழாவில் சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவிற்கு விக்கிரவாண்டி பேரூராட்சி தலைவர் அப்துல்கலாம் தலைமை தாங்கினார். இந்த விழாவில் பள்ளி மேலாண்மை குழு பாடத்தொகுப்பு அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகத்தை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் பாலாஜி, முன்னால் துணைத்தலைவர் சர்க்கார் பாபு, தலைமை ஆசிரியர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இல்லம் ‌தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கமலக்கண்ணன், பெல்லாரோ ஜோசப், தமிழழகன், பேரூராட்சி கவுன்சிலர் பிரியா பூபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |