Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்…  

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்  இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. 

2019-ல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் அசத்தலான வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு இந்த ஆண்டின் இரு அணிகளும் மோதும் முதல் போட்டிஇதுதான்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில்  இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் ஆதிக்கம் செலுத்தி போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி பத்திரிகையாளர் சந்திப்பு:

முதல் ஒருநாள் போட்டி குறித்து போது, “ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணியிடம் மோதும்போது புள்ளிவிவரங்களை வைத்து ஆட்டத்தின் முடிவை கணிக்கக்கூடாது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி வருவது ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது. அவர்களை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை மொத்தம்  137 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் இந்தியா 50 வெற்றிகள், ஆஸ்திரேலியா 77 வெற்றிகள் மற்றும் 10 போட்டிகளுக்கு முடிவு இல்லாமல் ரத்தாகியுள்ளன.

மும்பையில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1:30 மணிக்குத் தொடங்கவுள்ளது.

Categories

Tech |