Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வகுப்புக்கு திடீர்னு சென்று…. பாடம் நடத்தி கேள்வி கேட்ட கலெக்டர்… திகைத்து போன மாணவர்கள்.. அடுத்த வாரமும் வருவேன்..!!

நாகை நாகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாடம் நடத்தியுள்ளார்.

தேசிய குடற்புழு நீக்க வார முகாம் நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.  இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்துள்ளார். இந்த முகாமை முடித்து விட்டு கலெக்டர் அதே பள்ளியில்  உள்ள பன்னிரெண்டாம் வகுப்பிற்கு சென்றுள்ளார். உடனே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களிடம் என்ன பாடம் படிக்கிறீர்கள்? எப்படி படிக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். பின் வேதியியல் புத்தகத்தை புரட்டிப் பார்த்து அதிலிருந்து சில கேள்விகளை மாணவர்களிடம் எழுப்பினார். அதில்  சிலர் பதில் அளித்தும்,  சிலர் பதில் சொல்ல தயங்கியும்  நின்றனர். பின்னர் கலெக்டர் புத்தகத்தை வைத்து மாணவிகளுக்கு பாடம் எடுத்துள்ளார்.

இதன்பின் கலெக்டர் அருண் தம்புராஜ் மாணவர்களிடம் பேசியதாவது,  மாணவர்கள் பள்ளிப்பருவத்தில் படிப்பில் கவனம் செலுத்தி கவனமாகப் படிக்க வேண்டும். அப்படி படித்தால் தான் என்னைப்போல் அதிகாரியாக முடியும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி குறிப்பு எடுத்துக் கொண்டால் நமக்கு ஞாபகசக்தி  இருக்கும்.

நாம் ஒரு பாடத்தை படிக்கிறோம் என்றால் அதில் உள்ள பேராவில் இரண்டு வரியாவது நமக்கு ஞாபகம் இருந்தால் தான் மிக எளிதாக புரியும்  என்றார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் படிப்பில் முழு கவனம் செலுத்தி நல்ல படிக்க வேண்டும். ஒரு வாரம் நான் உங்களுக்கு நேரம் தருகிறேன். வரும் திங்கள்கிழமை இதேபோல் நான் வகுப்பறைக்கு வந்து உங்களிடம் சொன்ன பாடத்திலிருந்து தேர்வு நடத்துவேன். நீங்கள் எல்லாரும் தேர்வுக்கு  தயாராகி  வெற்றி பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |