நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் ராம் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மணகாவலன்பிள்ளை நகர் பகுதியில் தனது நண்பர்கள் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அவர்கள் அரிவாளால் ராம்குமாரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் படுகாயமடைந்த ராம்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.