பெருமாள் கோவிலில் பங்குனி தேர் திருவிழா நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற சீனிவாச பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தேர் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பெருமாளுக்கு காலை மற்றும் மாலை புஷ்ப அலங்காரத்தில் உலா நடைபெறுகிறது. இதனையடுத்து நேற்று மாலை பெருமாளுக்கு கல்கருட சேவை நடைபெற்றது. மேலும் வருகின்ற 18-ஆம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் 10 நாட்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து செல்கின்றனர்.