நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிக வரித்துறை அபராதம் விதித்தது. இந்த நிலையில் விஜய் தரப்பில், ஏற்கனவே நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டது. அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளேன்.
ஆகவே அபராதம் விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது வணிகவரித்துறை சார்பில் நடிகர் விஜய்யின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியது. இது குறித்து மேலும் சில விபரங்களைக் கேட்ட நீதிபதி, நடிகர் விஜய் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.