சீன அரசு உக்ரைனில் தாக்குதலை அதிகரிக்க ரஷ்யா தங்களிடம் ராணுவ உதவி கேட்டதாக கூறப்படும் தகவல் பொய் என்று கூறியிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 19-ஆவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷ்யப்படைகள், அந்நாட்டின் பல நகர்களில் தீவிரமாக தாக்குதல் முன்னெடுத்து வருவதால் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனிடையே அமெரிக்கா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ள சீனாவிடம் ராணுவ உதவிகளை ரஷ்யா கேட்டதாக குற்றம்சாட்டி இருக்கிறது.
மேலும் அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யா தங்களின் தாக்குதலை அதிகரிப்பதற்காக சீன நாட்டிடம் ஆயுதங்கள் கோரியதாக கூறியிருக்கிறார்கள். இதனை முற்றிலுமாக மறுத்துள்ள சீனா, ரஷ்யா தங்களிடம் ராணுவ உதவி கேட்டதாக வெளியான தகவல் உண்மை கிடையாது. தீங்கிழைக்கக் கூடிய எண்ணத்துடன் அமெரிக்கா, உக்ரைன் பிரச்சினையில் சீனாவை நோக்கி தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறது.