ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாவநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி மையத்தின் பயிற்றுநர் டேனியல், மாவட்ட பயிற்சியாளர் ராமு, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ரமேஷ் பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், சுகுமார், கண்ணன், முரளிதரன், பயிற்சி உதவியாளர் நந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பாபநாசம், திருப்பனந்தாள், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்துகொண்ட 70-க்கும் மேற்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவரின் கடமைகள், பல்வேறு பராமரிப்பு பதிவேடு, திட்ட நோக்கங்கள், ஊராட்சி சட்டங்கள், கிராமசபை கூட்டங்கள், போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பயிற்சி கூட்டத்தில் கலந்துகொண்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சான்றிதழ்கள், புத்தகம் மற்றும் கைப்பை போன்ற பரிசுகளை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.