Categories
மாநில செய்திகள்

வரப்போகுது புதிய மாற்றங்கள்…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று வட்டார கல்வி அலுவலர் களாக நேரடி பணி நியமனம் பெற்ற 95 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தரமான கல்வி வழங்குவது அரசின் கடமை ஆகும். அதனால்தான் முதல்வர் தனது அனைத்து நிகழ்வுகளிலும் கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து அதிகமாக பேசி வருகிறார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக மட்டுமே சீரான எதிர்காலத்தை உருவாக்க முடியும். தமிழ்வழியில் பயிற்றுவிக்கும் வசதி இருந்தும் சில பள்ளிகளில் தமிழ் வழியில் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பள்ளிகளில் தமிழ் வழியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இரு மொழிக் கல்வி, மூன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கு தேர்வு வைக்கக்கூடாது போன்றவற்றில் உறுதியாக உள்ளோம். பணம் கட்டாத மாணவர்களை தனியார் பள்ளிகள் வெளியில் நிறுத்தக்கூடாது.

10 ஆயிரத்திற்கும் மேலான பழமையான பள்ளி கட்டிடங்கள் இருப்பதால் கணக்கிட்டுள்ளார். அவற்றை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மறுதேர்வு இன்றி பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று போராடி வருவது மிகவும் சங்கடமாக உள்ளது. நாளை இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உள்ளிட்டோர் பேச உள்ளோம். இதுகுறித்து விரைவில் மகிழ்ச்சி அறிவிப்பு வெளிவரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |