இயக்குனர் ஐஸ்வர்யாவை நேரில் சந்தித்து வாழ்த்திய ராகவா லாரன்ஸ்.
பிரபல இயக்குனரான ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அதன் பின்னர் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் முசாபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்குக்கிறார். இடையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மீண்டு வந்து முசாபிர் பாடலை இயக்கி வந்தார். மீண்டும் இவருக்கு காய்ச்சல், தலை சுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முசாபிர் வெளியாக இருந்த நிலையில் ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் டீஸர் மட்டும் வெளியானது.
Something interesting is brewing…my brain is racing after meeting up with my dear @offl_Lawrence Anna ! #workmode on ..wherever whenever whatever! pic.twitter.com/iv1DOryuMe
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 13, 2022
தற்போது இவர் முசாபிர் ரிலீஸுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் ஐஸ்வர்யாவை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “சுவாரஸ்யமான ஒன்று உருவாகிறது. அன்பான அண்ணனை சந்தித்த பிறகு மூளை இன்னும் வேகமாக செயல்படுகிறது” என குறிப்பிட்டு இருக்கின்றார். இது தற்போது வைரலாகி வருகின்றது.