Categories
தேசிய செய்திகள்

ஹேப்பியோ ஹேப்பி…. இனி அரை நாள் மட்டுமே பள்ளி இயங்கும்…. குஷியில் பள்ளி மாணவர்கள்…!!!!

நாளை முதல் தெலுங்கானாவில் வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக பள்ளிகள் அரை நேரம் மட்டுமே செயல்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தெலுங்கானா மாநிலத்தில் வெப்பம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் சிரமமப்படுகிறார்கள்.
இந்நிலையில் கோடை விடுமுறை வருவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இந்த ஆண்டின் இறுதி பருவ தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நடப்பு பருவ கல்வி ஆண்டு (2021-2022) முடியும் வரை பள்ளிகள் அரை நேரம் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மார்ச் 15(நாளை) முதல் மே மூன்றாவது வாரத்தில் வரும் கடைசி வேலை நாள் வரை காலை 7.45 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |