இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த கமலுக்கு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ்.
லோகேஷ் கனகராஜ் “மாநகரம்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் “கைதி” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் ஹிட்டானது. அடுத்து விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமலின் “விக்ரம்” திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் ஆவார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளுக்கு கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ரசிகராக தொடங்கி.. இயக்குனராக வளர்ந்து.. இன்று சகோதரராக மாறியிருக்கும் லோகேஷுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக லோகேஷ் குறிப்பிட்டதாவது, “இதைவிட சிறந்த பிறவிப் பலன் வேறொன்றுமில்லை. நன்றி ஆண்டவரே” என்று பதிலளித்துள்ளார். இப்பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.