பெண்ணை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்விளை பகுதியில் சுடலை என்பது வசித்து வருகிறார். இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுடலை உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மூக்கம்மாளின் மகன் இசக்கிதுரைக்கும் அதே பகுதியில் வசிக்கும் இரட்டை முத்து என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வழுக்கைகுளம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மூக்கம்மாள், அவரது மகள்களான கனகா, இசக்கியம்மாள் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இரட்டைமுத்து அவர்களே அவதூறாக பேசியதுடன் மூக்கம்மாளை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மூக்கம்மாள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் இரட்டை முத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.