Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…. வசமாக சிக்கிய 2 வடமாநில வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டில் 15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 வடமாநில வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ.வு.சி. நகரில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் வீட்டில் 80 மூட்டைகளில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 வடமாநில வாலிபர்களையும் கைது செய்ததோடு அவர்கள் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |