Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. 20 கிலோ முதல் 50 கிலோ வரை குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாக கொண்ட இலவச அரிசி வழங்கப்படுகிறது. இவற்றைத் தவிர கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்களும் வழங்கப்படுகின்றன. ஆனால் அரசு வழங்கும் ரேஷன் பொருள்களை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள். ரேஷன் கடை ஊழியர்களின் உதவியுடன் நடைபெறும் இந்த பிரச்சினைக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இருந்தாலும் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட கர்நாடகா,ஆந்திரா எல்லை மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாவட்டங்களில் இருந்து தான் அதிகமாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதன்படி கடந்த 2ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வளர்மதி தலைமையில் ஓசூர் சாலையில் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 15 டன் எடை கொண்ட 300 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் போச்சம்பள்ளி அருகே உள்ள சாந்தன் ஒரு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர்கள் மகேந்திரன் மற்றும் தர்மபுரி மாவட்டம் திம்மாபுரம் அடுத்த தபோவனம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும் தங்கள் மாவட்டங்களில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கர்நாடகாவிற்கு நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் லாரியுடன் சேர்த்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |