Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. ரஷ்யாவிற்கு உதவுமா சீனா….? எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!!

ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சீனாவிடமிருந்து அதனை வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சீனாவிடமிருந்து வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரஷ்யா உக்ரைனில் போர் தொடங்கி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் சில வகையான ஆயுதங்கள் இல்லாமல் இருக்கிறது. மேலும் அமெரிக்கா ரஷ்யாவுக்கு உதவ முன்வரும் சீனாவை எச்சரிக்க தயாராகி வருகிறது” என்று கூறியுள்ளார்

Categories

Tech |