புதிதாக ரெட்மி நிறுவனம் ஸ்னேப் டிராகன் பிராசஸருடன் குறைந்த விலையில் போன் வெளியிட இருக்கிறது.
இந்தியாவில் வருகிற மார்ச் 17-ஆம் தேதி ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி 10 பட்ஜெட் போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஸ்நாப்டிராகன் சிப்செட் இடம்பெற இருக்கின்றது. இந்நிலையில் இந்த புதிய போன் கடந்த தலைமுறை விட இரண்டு மடங்கு அதிவேகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து கூடுதலாக பின்புறத்தில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, டெப்த், ஏ.ஜ சென்சார், டெக்ஸ்சர் பேக் பேனல் ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும் போனில் பிளாக்பஸ்டர் டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரி இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இவை ரெட்மி 1௦ பிரைம் விலையை விட குறைவாக இருக்கும் எனவும், ரெட்மி 1௦ பிரைமின் 4 ஜிபி+65 ஜிபி வேரியண்டின் விலை 12,999 ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.