Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மறுமணம் செய்ய தயார்”… “ஆனா மூணு கண்டிஷன் இருக்கு”… என்னப்பா அந்த கண்டிஷனு…???

டி.இமான் மறுமணம் செய்வதாகவும் 3 கண்டிஷன் போட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் 2008ஆம் வருடம் மோனிகா ரிச்சர்டு என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு சட்டரீதியாக இருவரும் பிரிந்துவிட்டதாக இணையத்தில் அறிவித்திருந்தார் இமான். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் இமான் மறுமணம் செய்வதாக தகவல் வெளியாகின. இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் அரேஞ்ச் மேரேஜ் மே மாதம் நடக்க இருப்பதாக செய்தி கசிந்தன.

இதை தொடர்ந்து அண்மையில் இமான் பேட்டி அளித்த போது, “தனது மறுமணம் குறித்து தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும் தன்னுடைய குழந்தைகளிடம் அன்பாக இருக்க வேண்டும்” என்று மூன்று கண்டிஷன் போட்டிருப்பாதாக  செய்தி வெளியாகி இருக்கின்றன.

Categories

Tech |