Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற பால்குட திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற பால்குட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே வடசென்னிமலை பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 9-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து 4-ஆம் நாள் திருவிழாவில் கோட்டைமேடு பகுதியில் ஏராளமான பக்தர்கள் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தியுள்ளனர். அதன்பிறகு பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தனர். இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Categories

Tech |