Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“போராடும் நிலை உருவாகக் கூடாது” அதிகாரிகளுக்கு உத்தரவு…. மேயரின் ஆய்வு….!!

குடிநீருக்காக போராடும் நிலை வரக்கூடாது என அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 57 வார்டுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடம் கோடை காலத்தில் பொதுமக்கள் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் வீதிக்கு வந்து போராடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இம்மாவட்ட நகராட்சியில் திருப்பாற்கடல் ஆறு மற்றும் சாலபோகம் வேகவதி ஆற்றுப்பகுதியில் மேயர் மகாலட்சுமி ஆய்வு செய்துள்ளார். அப்போது மாநகராட்சியில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டுமாறும் மற்றும் கோடை காலங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக போராடும் நிலை உருவாகக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |