Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷ் அண்ணாவுடன் சேர்ந்து விடுங்கள்”… ஐஸ்வர்யாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்…!!!

ஐஸ்வர்யா தனுஷை பிரிந்ததால் மீண்டும் சேரும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. இவரும் நடிகர் தனுஷும் 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளதால் இருவரும் கூடிய விரைவில் சேர்ந்து விடுவார்கள் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஐஸ்வர்யாவை ராகவா லாரன்ஸ் நேரில் சந்தித்து உள்ளார். அப்புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. அப்போது ரசிகர்கள், “அண்ணாவும் நீங்களும் சேர்ந்து விட்டதாக வெளியாகும் செய்திக்காக அனைவரும் காத்திருக்கின்றோம்”. மேலும் “உங்களின் பெயருக்குப்பின் தனுஷ் அண்ணாவின் பெயரை நீக்கமல் இருப்பதால் நீங்கள் சேர்ந்து விடுவீர்கள் என நம்புகிறோம்” என பதிவிட்டு வருகிறார்கள்.

Categories

Tech |