Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிருவள்ளூர் கிராமத்தில் புகழ்பெற்ற அங்காளி காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மயானக்கொல்லை திருவிழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன்பின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனை பல்லக்கில் வைத்து மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அதன்பிறகு சிறப்பான மயானக்கொல்லை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சில பக்தர்கள் அம்மன் போல் வேடமணிந்து பக்தர்களின் மேல் நடந்து ‌சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்‌.

Categories

Tech |