Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குழந்தையுடன் சடலமாக மிதந்த பெண்…. போலீஸ் விசாரணை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

ராணிப்பேட்டை  மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே கஸ்தியான்வெட்டி பகுதியில் விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குழந்தையுடன் பெண் சடலமாக மீட்கப்பட்டார். இந்தப் பெண்ணின் விவரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த கல்பனா என்பதும் அவருடைய மகள் சாதனா ஸ்ரீ என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் கல்பனாவுக்கும் வி.சி மோட்டூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கல்பனாவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தையுடன் கல்பனா தன்னுடைய தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய கல்பனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |