Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருவிழாவில் கலந்து கொண்ட பெண்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எஸ். குலவாய்பட்டியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யபிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சத்திய பிரியா முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் மர்ம நபர்கள் சத்ய பிரியாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சத்யபிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |