Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடையில் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சித்திரம்பட்டி கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முசிறி ரவுண்டானா அருகில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராமகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |