லெஜெண்ட் சரவணாவின் திரைப்படத்திற்கு லட்சுமி ராய் குத்தாட்டம் ஆடியுள்ளார்.
லெஜெண்ட் சரவணன் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இதுவே இவரின் முதல் படமாகும். இத்திரைப்படத்தில் நடிகை லஷ்மிராய் பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருக்கின்றார். இத்திரைப்படத்தை செர்ரி-ஜேடி இயக்குகிறார்கள். கதாநாயகியாக உர்வசி ரட்டேலா நடிக்கின்றார். முக்கிய வேடங்களில் மயில்சாமி, பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் நடிகை லஷ்மிராய் பாடல் ஒன்றுக்கு நடனமாடி உள்ளதாக கூறப்படுகின்றது. இப்பாடல் கவர்ச்சியான நாட்டுப்புற குத்து பாடலாகும். இந்த பாடலுக்காக லட்சுமிராய் 6 நாட்கள் படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்ராம். மேலும் லட்சுமிராய் நடனமாடிய பெரும்பாலான குத்து பாடல்கள் ஹிட்டாகி உள்ளது. எனவே இப்பாடல் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.