Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. எப்போது தெரியுமா…???

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வானது ஹோலிப் பண்டிகைக்கு முன்பாக வழங்க பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சலுகை ஒன்றை அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஹோலி பண்டிகையை முன்னிட்டு அந்த சலுகை வழங்கப்பட உள்ளது. இதை அடுத்து அரசு ஊழியர்களின் சம்பளமானது ஆயிரம் 1000ரூபாய் முதல் 8000 ரூபாய் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய மோடி அரசானது, ராணுவ துறையில் சிவில் ஊழியர்களுக்கான ரிஸ்க் அலோவன்ஸை, ஹோலிப் பண்டிகைக்கு முன்பாக அதிகரிப்பதாக முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ராணுவ துறையில் உள்ள பல்வேறு வகையான சிவில் ஊழியர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. மேலும் பதவிக்கு ஏற்ற முறையில் சம்பளமும்  மாறுபடுகிறது. இவ்வாறு வழங்கப்படுகின்ற சிறப்பு தொகையினால் வருடாந்திர அடிப்படையில் ஊழியர்களின் சம்பளமானது ஆண்டுக்கு 8000 ரூபாய் வரையில் அதிகரிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, இந்த பிரிவில் வரும் ஊழியர்களின் அலோவன்ஸின் கீழ் திறமையற்ற பணியாளர்களுக்கான அபாயக் கொடுப்பனவு என்ற முறையில் மாதம் 90 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் இது தவிர  செமி குஷன் பணியாளர்களுக்கு ரூ.135, திறமையான பணியாளர்களுக்கு ரூ.180, அரசிதழ் அல்லாத அதிகாரிகளுக்கு ரூ.408, கெசட்டட் அதிகாரிகளுக்கு ரூ.675 வீதம் உதவி தொகையானது மாதம்தோறும் வழங்கப்பட உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் இச்சலுகைகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |