ஐஸ்வர்யா அண்மையில் ராகவா லாரன்ஸுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. இவரும் நடிகர் தனுஷும் 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளதால் இருவரும் கூடிய விரைவில் சேர்ந்து விடுவார்கள் என கூறப்படுகின்றது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை ராகவா லாரன்ஸ் நேரில் சந்தித்து உள்ளார். அப்புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா.
இந்த புகைப்படங்களில் ஐஸ்வர்யாவின் கையில் இன்ஜெக்ஷன் மற்றும் இன்ஜெக்சனுக்கான செரின் இருக்கின்றது. இதைப்பார்த்த ரசிகர்கள் “அச்சோ உங்களுக்கு என்னாச்சு மேடம்?”… “கையில் இன்ஜெக்ஷன் செரின் இருப்பதால் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள் மேடம்” என கவலையுடன் விசாரித்து வருகின்றனர் . இதன் வாயிலாக ஐஸ்வர்யாவுக்கு இன்னும் உடல் நிலை முழுமையாக சரியாகதது போல் தெரிகிறது. தனுஷை பிரிந்த சோகத்தால் ஐஸ்வர்யாவுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வருவதாக செய்தி வெளியாகி வருகின்றது.