தமிழகத்தில் புதிதாக திருமணம் செய்தவர்கள் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயரை எப்படி சேர்ப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தேர்தலுக்கு என்று பல வாக்குறுதிகளை கூறிவந்தனர். அதிலும் திமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டார். அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வந்த காரணத்தினால் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
அடுத்ததாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதிதாக திருமணமானவர்கள் ரேஷன் கார்டு பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். திருமணத்திற்கு பிறகு ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதியதாக வந்தால், அவரது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டியது அவசியம் அல்லது கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் புதிய கார்டு விண்ணப்பிக்க நினைத்தாலும், முதலில் ஏற்கனவே இருந்த ரேஷன் கார்டில் உறுப்பினர்களின் பெயரை நீக்க வேண்டும்.
அவர்களின் பெயரை நீக்கிய பின்னர் புதிய கார்டில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை சேர்க்க முடியும். இதனை ஆன்லைன் மூலமாகவே நாம் செய்யலாம். இதை தொடர்ந்து அடுத்ததாக ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும். இதில் முகவரியை மாற்ற வேண்டும். பின்னர்திருத்தப்பட்ட ஆதார் அட்டையை ஆவணமாக சமர்ப்பித்து ரேஷன் கார்டில் பெயர் சேர்த்துக்கொள்ள முடியும். https://tnpds.gov.in/ லிங்கில் சென்றால் ரேஷன் கார்டு மாற்றங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற அனைத்து தகவல்களும் கிடைக்கும். மேலும் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் என்ற 1967 அல்லது 1800-425-5901 எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும் என்றாலும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்று மட்டும் இருந்தால் போதும் என்று கூறியிருந்தனர். ஆனால் தற்போது ஆதார் கார்டு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது . அடுத்ததாக குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு கொண்டு ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.