ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 35 லட்சம் குழந்தைகள், சத்துணவு சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருப்பதாக ஐநா சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் அதிகப்படியான குழந்தைகளுக்கு சர்வதேச உதவி நிறுவனங்களின் மூலமாக ஊட்டச்சத்து சிகிச்சை அளிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா குழந்தைகள் நிதியம், இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளில் பாதி குழந்தைகள் இந்த வருடத்தில் கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு ஆளாவார்கள் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அந்நாட்டில் அம்மைநோய் பரவிக்கொண்டிருக்கிறது. மக்கள் இடம்பெயர்வது, வேலையில்லாத நிலை, மோதல்கள், அரசியல் மாற்றம் போன்றவற்றால் அந்நாட்டில் மக்கள் லட்சகணக்கில் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே அந்நாட்டு மக்களுக்கு உதவுமாறு உலக நாடுகளுக்கு சர்வதேச உதவி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.