Categories
உலக செய்திகள்

சூப்பர்….! “3 மாதங்களுக்கு இதன் விலை பாதியாக குறைக்கப்படும்”…. பிரபல நாட்டில் அதிரடி அறிவிப்பு….!!!

நியூசிலாந்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததன் எதிரொலியாக 3 மாதங்களுக்கு பொது போக்குவரத்து கட்டணம் பாதியாக குறைபாடும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் நியூசிலாந்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து அரசு பொதுமக்களுக்கு விலை உயர்வுகள் பாதிக்காத வகையில் பல சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் “3 மாதங்களுக்கு போக்குவரத்து கட்டணங்கள், எரிபொருளுக்கான கலால் வரிகள் குறைக்கப்படும். மேலும் கட்டுமானத்திற்கு தேவைப்படும் மூலப் பொருள்கள் மற்றும் உணவுகள் விலையும் உயர்ந்துள்ளது. இதன்படி நியூசிலாந்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 சென்ட்கள்  குறைக்கப்பட்டு 40 லிட்டர் பெட்ரோல் 11 டாலருக்கு விற்பனை செய்யப்படும் என்று நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |