ரஷ்யாவில் செய்தி நேரலையில் ஒரு பெண் செய்தியாளர் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளுடன் வந்ததால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ரஷ்யாவில் செய்தி நேரலை நடந்து கொண்டிருந்தபோது, Maria Ovsyannikova என்ற ஒரு பெண் செய்தியாளர், திடீரென்று உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் இருக்கும் பதாகையை வைத்துக்கொண்டு தோன்றியிருக்கிறார்.
அதாவது, உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போர் குற்றம், பொய்யான பிரச்சாரங்களை மக்கள் நம்ப கூடாது, ரஷ்ய மக்களே போருக்கு எதிராக இருக்கிறார்கள் என்று எழுதப்பட்ட பதாகையை நேரலையில் வைத்திருந்துள்ளார். எனவே அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.