Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உலக அமைதி வேண்டி… சிவன் கோவிலில் சங்காபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்…!!

உலக அமைதி வேண்டி விஸ்வநாதர் கோவிலில் சங்காபிஷேகம்  மிக சிறப்பாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூரில் விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி கடைசி சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றுள்ளது. இக்கோவிலில்  வலம்புரி சங்குகளை வரிசையாக வைத்து ஒவ்வொரு சங்கின் மீது ஏலக்காய், பச்சைக் கற்பூரம் கலந்து காசி தீர்த்தம் ஊற்றி  பூ அலங்காரம் செய்தனர். பின் தீர்த்த கலசம் வைத்து யாக குண்டம் வளர்த்து மகா கணபதி ஹோமம்  செய்தனர்.

இதை தொடர்ந்து ஒவ்வொரு சங்கிலும் உள்ள தீர்த்தத்தை விஸ்வநாத சுவாமி மேல் ஊற்றி மகா சங்காபிஷேகம் செய்து வாசனை திரவியங்களை கொண்டு சிறந்த முறையில் அபிஷேகமும் நடைபெற்றது. பின் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விஸ்வநாத சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையடுத்து ஷோடச உபசாரங்கள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி எடுத்து பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு பக்தி பாடல்களைப் பாடி இறைவனை வழிபாடு செய்தனர். மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. சங்காபிஷேகத்தின் போது உலக அமைதி வேண்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |