கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த தொழிலதிபரான சுங்கேசர் ஹிரா ரத்தன் மானக் அதிசய மனிதன் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறார். ஏனெனில் இவர் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வெறும் தண்ணீர் மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்தி உயிர் வாழ்கிறார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் சூரிய வழிபாட்டை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து சூரியன் உதயமாகி ஒரு மணி நேரமும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக ஒரு மணி நேரமும் வெறும் கண்ணால் சூரியனை வழிபாடு செய்துள்ளார். ஆரம்பத்தில் இவருக்கு இவ்வாறான வழிபாடு கடினமாக இருந்த போதிலும் 7 மாதங்கள் சென்ற பிறகு இது இயல்பான ஒன்றாக மாறி விட்டதாம்.
வெறும் ஒன்பது மாதங்களுக்குள் சூரிய ஆற்றலை முழுமையாக பெற முடிந்தது என மானக் கூறியுள்ளார். இவருடைய இந்த அதிசய ஆற்றல் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. நாசா விஞ்ஞானிகள் கூட இவரை வைத்து சில காலம் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இவர் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மானக் நேற்று முன்தினம் தன்னுடைய 84 ஆவது வயதில் கேரளாவில் உள்ள சகோதரகுளத்தில் அமைந்துள்ள தன்னுடைய சொந்த வீட்டில் மரணம் அடைந்தார்.