ஜெயங்கொண்டம் பகுதியில் டாக்டர்கள் ஆலோசனையின்றி மாத்திரைகள் வழங்குவதை தவிர்க்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். இதில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஸ்ரீதேவி, ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் குருநாதன் கந்தையா பங்கேற்றார்.
மேலும் இந்த கூட்டத்திற்கு செயலாளர் சங்கர், பொருளாளர் கார்த்திகேயன், மொத்த மருந்து வணிகர் சங்க தலைவர் முருகன், சில்லரை மருந்து வணிகர் சங்க தலைவர் அசோக்குமார், மற்றும் பல பகுதிகளில் உள்ள மருந்து வணிகர்கள், மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசபட்டதாவது, டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள், மாத்திரைகள் வழங்குவதே மருந்து வணிகர்கள் தவிர்க்க வேண்டும்.
டாக்டரின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை வழங்க வேண்டும். சிறு வயதில் கர்ப்பம், குழந்தை திருமணம், அடிக்கடி கருக்கலைப்பு, சிறுவயது கருக்கலைப்பு, உள்ளிட்ட செயல்களால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை வழங்க வேண்டும் என்று மருந்து வணிகர்களிடம் அறிவுறுத்தபட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் முடிவில் வணிகர் சங்க மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.