Categories
உலக செய்திகள்

“நேட்டோ நாடுகள்”…. ரஷ்யா தாக்குதல் நடத்தும்?…. உக்ரைன் அதிபர் எச்சரிக்கை……!!!!!

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா விரைவில் நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதலை முன்னெடுக்கக்கூடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையில் மேற்கு உக்ரைனின் லீவ் நகரில் இரவோடு இரவாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 134 பேர் படுகாயமடைந்தனர். இப்பகுதியானது நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருக்கும் போலந்து நாட்டு எல்லைக்கு மிக அருகில் அமைந்திருக்கும்.

இந்நிலையில் உக்ரைன் வான்பரப்பை மூடுவதாக அறிவிக்கவில்லை என்றால் ரஷ்யாவின் ஏவுகணைகள் நேட்டோ நாடுகளிலும் விழக்கூடும் என்றும் ரஷ்யா நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ள அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் வான்பரப்பை மூடுவதாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கிடையில் உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில், தாக்குதலில் பலியான பொதுமக்களின் எண்ணிக்கை 2,000-த்தை தாண்டியுள்ளது.

Categories

Tech |