ரஷ்யா தொழில் அதிபர்கள் மீது 4ஆம் கட்ட பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியமானது விதித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் கால் பந்து கிளப்ஆன செல்சியின் உரிமையாளர்ஒருவர், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த Abramovich, உள்ளிட்ட ரஷ்ய செல்வந்தர்கள் அதிபர் புதினுடன் தொடர்பில் இருந்து கொண்டு போருக்கான நிதிஉதவியை அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து கனடா, பிரிட்டனை தொடர்ந்து ஐரோப்பியஒன்றியம் ரஷ்ய செல்வந்தர்களினுடைய சொத்துக்கள், ஆடம்பர பங்களாக்கள், சொகுசு கப்பல்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி ஐரோப்பியா ஒன்றியத்தை சார்ந்த நிறுவனங்களிலுள்ள ரஷ்ய தொழில் அதிபர்களின் முதலீடுகளையும் முடக்கயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.