மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி மணப்பாக்கத்தில் இருக்கும் அழகு நிலையத்தில் தலையில் எண்ணெய் மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது மசாஜ் செய்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவர் திடீரென மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.