விழிப்புணர்வு வாகனத்தை முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் தொடங்கி வைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் வைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்த “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டம் குறித்து விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மாதவன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் திட்டத்தின் விப்புணர் வாகனத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு இருக்க வேண்டும். இதனால் விழிப்புணர்வு வாகனம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெற்றோர்கள், பொதுமக்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு சார்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.