Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடனை திருப்பி தரவில்லை” மூதாட்டியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை அருகே மேல்கரை பகுதியில் ஞானபிரகாசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுயஉதவி குழு ஒன்றில் உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் ஞானப்பிரகாசி சுய உதவி குழுவில் இருந்து பணத்தை கடனாக பெற்று அதை வேறொரு நபருக்கு கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் உரிய நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் ஞானப்பிரகாசி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக ஞானப்பிரகாசி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஞானபிரகாசியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஞானபிரகாசி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஞானபிரகாசியின் மகன் இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |