சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மெய்ஞானபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஒரு குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 1/4 கிலோ கஞ்சா இருந்தது.
அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. ஆனால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பியோடினர். இதன்பிறகு காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய 2 நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.