கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை எம்.ஜி.ஆர் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முஸ்தபா தனது பழ வண்டியில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் கோட்டப்பட்டி பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் முஸ்தப்பாவின் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.