உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் ரஷ்ய படைகள் முக்கியமான நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே சமயம் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதற்கிடையில் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷ்ய படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதேநேரம் வடக்கு மற்றும் கீவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றனர். ரஷ்யபடைகள் கீவ் நகரை சுற்றிவளைக்க தீவிரம் காட்டி வருகிறது.
இந்தநிலையில் இருநாடுகளுக்கு இடையிலான போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆயுதங்களை வழங்குவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக ஜோ பைடன் தன் டுவிட்டர் பதிவில் “ரஷ்யபடைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம். அத்துடன் உக்ரேனியர்கள் உயிர்களைக் காப்பாற்ற அவர்களுக்கு நிதியுதவி மற்றும் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். அந்த நாட்டு அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.