நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகவலம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் இன்றி விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல்லை நேரடியாக விற்பனை செய்கின்றனர். இந்த நிலையத்தை அமைச்சர் காந்தி திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். இவர் அதிகாரிகளிடம் நெல் கொள்முதல் பற்றியும், விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் பற்றியும் கேட்டறிந்தார்.
இந்த கொள்முதல் நிலையத்தில் மேற்கூரை அமைக்கபடாமல் திறந்த வெளியில் இருக்கிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கூரை அமைக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தாசில்தார் ரவி, கோட்டாட்சியர் சிவதாஸ், நெமிலி ஒன்றிய ஊராட்சி தலைவர் வடிவேலு உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர்.