இந்திய ஏவுகணை ஒன்று கடந்த 9ஆம் தேதி பாகிஸ்தானில் விழுந்தது தொடர்பாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பகுதியில் இந்திய ஏவுகணை ஒன்று கடந்த 9 ஆம் தேதி விழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ அமைச்சகம் பராமரிப்பு பணியின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இது குறித்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் இந்த விளக்கத்தை பாகிஸ்தான் அரசு ஏற்க மறுத்துள்ளது.
இந்நிலையில் மேற்குறிப்பிட்டுள்ள சம்பவம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் இந்திய ஏவுகணை, தாக்குதலுக்காக ஏவப்பட்டதற்கான எந்த அறிகுறியும் நாங்கள் கேள்விப்பட்ட வரையில் இல்லை என்றும், இது ஒரு விபத்தே தவிர வேறொன்றும் இல்லை என்றும் கூறியுள்ளார்.