கிரிக்கட் மைதானத்தில் வைத்து வீரரிடம் விஜய் ரசிகர்கள் ”பீஸ்ட்” அப்டேட் கேட்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
Asking @MdShami11 for #BeastUpdate 😂 #Beast #INDvsSL #BengaluruTest @Nelsondilpkumar pic.twitter.com/r3tsyS3iuv
— Sivadharshan (@Sivadharshan_v2) March 13, 2022
இதற்கிடையில் , இந்த படத்தின் டிரைலர் ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அஜித் ரசிகர்கள் யாரைப் பார்த்தாலும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டது போல தற்போது விஜய் ரசிகர்களும் பீஸ்ட் அப்டேட் கேட்டு வருகின்றனர். இந்த வகையில் விஜய் ரசிகர்கள் இந்திய மற்றும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கிரிக்கட் வீரர் ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் கேட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பது குறிப்பிடதக்கது.