தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சிறிய செயலும் கடினமாகவே தோன்றும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரியாக இருக்கும். பண செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதாக இருக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் சீராக தான் இருக்கும்.பூமி வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். சகோதரர்களுடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.
அவ்வப்போது மனதில் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாயின் உடல்நிலையில் கவனமாக இருங்கள். வீண் செலவுகளை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற மன சஞ்சலம் கொஞ்சம் இருக்கும். இன்று புத்தாடைகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும். அதுமட்டுமில்லாமல் யாருக்கும் ஆபரணங்களில் நீங்கள் கடனாகக் கொடுக்க வேண்டாம். இதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை :தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெளிர் நீலம்