Categories
தேசிய செய்திகள்

பென்சன் வாங்குபவர்களுக்கு…. புது ரூல்ஸ் வந்துட்டு…. என்னென்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக தேசிய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் 18-65 வயது வரை இருப்பவர்கள் முதலீடு செய்யலாம். மேலும் தனியார்துறை ஊழியர்களும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும். பென்சன் ஒழுங்கு முறை ஆணையத்தால் தேசிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படையில் மூத்த குடிமக்களுக்கு பல பலன்களை வழங்கவும் பென்சன் ஒழுங்குமுறை வாரியம் புதிய மாற்றத்தை முன்மொழிந்து உள்ளது.

இந்த திட்டத்தில் 10 லட்சம் பேர் புதிதாக சேர்க்க இருப்பதாக பென்சன் ஒழுங்குமுறை வாரியம் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது. சென்ற வருடம் 6 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மத்திய அரசின் கீழ் இயங்கி வருவதால் 100 சதவீதம் பாதுகாப்பு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் நிலையான வருமானம் கிடைப்பதால் பொதுமக்களிடையே தேசிய பென்சன் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பென்சன் ஒழுங்குமுறை வாரியத்தால் கொண்டுவரப்பட்டு உள்ள புதிய மாற்றங்களை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இப்போது தேசியபென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய அதிகபட்சம் வயது 70 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அத்துடன் இத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணையும்போது அவர்களுக்கு PFRDA என்ற பெரிய நிவாரணத்தை வழங்கி உள்ளது. இப்போது 75 வயது வரையிலும் NPS கணக்கைத் தொடங்க முடிகிறது. அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் 5 லட்சத்துக்கும் குறைவான ஓய்வூதிய தொகையை வைத்திருக்கும்போது முழுப் பணத்தையும் எடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பாக இது 2 லட்சத்திற்கும் குறைவான ஓய்வூதிய தொகை வைத்திருந்தால் மட்டுமே முழு தொகையை எடுக்க முடியும்.

Categories

Tech |