Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேர்வில் பிட் அடித்த மாணவன்…. ஆசிரியர் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு…. திருப்பூரில் பரபரப்பு….!!

தேர்வின்போது பிட் அடித்ததாக ஆசிரியர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கனியூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் 1 படித்து வரும் கலைச்செல்வன் என்ற மாணவர் தேர்வின்போது பிட் அடித்துள்ளார். இதனை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனையடுத்து மாணவன் கலைச்செல்வன் பள்ளியில் முதல் தளத்திற்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளார்.

இதில் ரத்தவெள்ளத்தில் கிடந்த கலைச்செல்வனை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கலைச்செல்வனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |