Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

பதவியில் இருக்கும் போது என்ன செஞ்சீங்க….. முன்னாள் மத்திய அமைச்சரிடம் ஜெயக்குமார் சரமாரி கேள்வி…!!

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதவியில் இருக்கும் போது அவர் செய்தது என்ன? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வள துறை அலுவலகத்தில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து அரசை குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அவரது கருத்துகளை நாங்கள் பெரிதாக ஏற்றுக்கொள்வது இல்லை.

அதை நாங்கள் பாஜக கட்சியின் கருத்தாகவும் நினைக்கவில்லை. மத்திய அமைச்சராக இருந்த சமயத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் எந்த ஒரு புதிய திட்டதை கொண்டு வரவோ, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவோ இல்லை என்று தெரிவித்தார். மேலும் அதிமுக  அரசு மத்திய அரசோடு நல்லிணக்கத்துடன் செயல்பட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. ஆகையால் யாராக இருந்தாலும் அரசை குறை கூறுவதற்கு முன் தாங்கள் என்ன நல்லது என்பதை யோசித்து பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |